ஏழைப் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு தையல் மெஷின்கள் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் வழங்கியது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 December 2023

ஏழைப் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு தையல் மெஷின்கள் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் வழங்கியது.


ஏழைப் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு தையல் மெஷின்கள் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் வழங்கியது. 



திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையில் திருப்பூர் பகுதியில் வசிக்கும் ஜெகதீஸ்வரி மற்றும் திருமதி பொன்மணி ஆகியோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தொழில் உதவி கேட்டு மனு செய்திருந்தனர். இந்த தகவலை திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சமூக சேவையாளர் இந்திராசுந்தரம் அவர்கள் தலைமையில் இயங்கும் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி ரஞ்சிதா தேவி அவர்களது முன்னிலையில் பயனாளிகள் ஜெகதீஸ்வரி மற்றும் திருமதி பொன்மணி ஆகியோருக்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad