அரசு வேலை வாங்கித் தருவதாக தாராபுரத்தில் 15 லட்சம் மோசடி பெண் உட்பட இருவர் கைது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வரும் நடராஜ் மற்றும் சாதிக் ஆகியோர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர் அதில் கொட்டாப்புள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் தமிழ்ச்செல்வி வயது 32 மற்றும் வி.குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் அருண்குமார் வயது 34 இவர்கள் இரண்டு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 15 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டனர் என தெரிவித்துள்ளனர் இந்நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் காவல் ஆய்வாளர் மணிகண்டனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தாராபுரம் கொட்டாப்புள்ளிபாளையம் சாலையில் வந்துகொண்டிருந்த குற்றவாளிகள் இருவரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து சுற்றி வளைத்து பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்து அறநிலையத்துறையில் நடராஜ் என்பவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் அதே நேரத்தில் சாதிக் என்பவருக்கு மத்திய அரசின் வேலை வாங்கித் தருவதாக அருண்குமார் பணத்தை ஏமாற்றியதை இருவரும் ஒப்பு கொண்டனர் இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment