இன்னுயிர் காக்கும் 48 திட்டம் கீழ் விழிப்புணர்வு பேரணி , பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2023

இன்னுயிர் காக்கும் 48 திட்டம் கீழ் விழிப்புணர்வு பேரணி , பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா !

 


இன்னுயிர் காக்கும் 48 திட்டம் கீழ் விழிப்புணர்வு பேரணி , பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா !



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கம் மேல்நிலைப் பள்ளியின்  ஜூனியர் ரெட் கிராஸ் பள்ளி மாணவ மாணவியர், பிரியா பாராமெடிக்கல் சயின்ஸ் & கல்லூரி , டாக்டர் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து இன்னுயிர் காக்கும் 48 திட்டம் கீழ் விழிப்புணர்வு பேரணி மற்றும் சென்ற கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா  நடைபெற்றது. இப் பேரணியை முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன்  கொடியசைத்து துவக்கி வைத்தார். அவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் , குமரலிங்கம் காவல் துணை ஆய்வாளர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் முக்கிய சாலைகள் வழியாக சென்று தமிழக அரசின் இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தினை பற்றி பதாகைகள் ஏந்தியவாறு துண்டு பிரசுரங்கள்  வழங்கி பொதுமக்கள் இடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  மற்றும் குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு குமரலிங்கம் பேரூராட்சி மூத்த திமுக முன்னோடிகள் நாச்சிமுத்து, ஆறுமுகம், மகுடீஸ்வரன்  மற்றும் தலைமை ஆசிரியர் பிரியா பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி முதல்வர், டாக்டர் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளையினர்



கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் அணிவித்து பாராட்டினார்கள். 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad