காய்ச்சலை பரப்பும் சாக்கடை கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்!
திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டு அங்காளம்மன் கோவில் வீதி கடைசி சாஸ்திரி வீதி யில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் மக்கள் பயன்படுத்தும் ரோட்டில் தேங்கி சாக்கடை சேராக உள்ளது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியது உள்ளது இது துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது இதனால் இந்த பகுதியில் உள்ள சிலருக்கு காய்ச்சல் இருமல் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இது பற்றி சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டல சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment