தனியார் நிறுவன அரைகுறை வேலையினால் பெரும் குழியில் சிக்கிய கிரேன்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் பெஸ்ட் கம்பெனி ரோடு இது அவிநாசி ரோடு ஆத்துப்பாளையம் ரோட்டை இணைக்கும் ரோடாகும் ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள கம்பெனிகள், பள்ளிகள், மற்றும் மின் மயானத்திற்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை இந்த ரோட்டில் தான் பயணிக்கின்றது இந்த பெஸ்ட் ரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் பாதாள சாக்கடை பணிகளுக்காக தனியார் நிறுவனங்களால் தோண்டப்பட்டது இந்த சாலையில் சரிவர குழிகளை மூடாமல் இருக்கின்றனர் மழைநீர் காக வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்ட இடங்களில் குழிகளை சரிவர மூடாததால் பெரும் குழி உள்ளது இந்த குழியில் கிரேனின் சக்கரம் சிக்கிக் கொண்டது. இந்த பகுதியில் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் வாகனங்கள்,பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பிறகு மற்றுமொரு கிரேன் வரவழைத்து குழியில் சிக்கிய கிரேன் மீட்கப்பட்டது. இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது தனியார் நிறுவனங்கள் குழிகளை அரைகுறையாக மூடி விட்டு சென்று விடுகின்றனர் இதனால் பெரும் வாகனங்களின் டயர்கள் உள்ளே சிக்கிக் கொள்கின்றது இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது வேலை முடிந்தவுடன் குழிகளை சரியாக மூட தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் பார்வையிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment