திருப்பூர் மங்கலத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ-கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 December 2023

திருப்பூர் மங்கலத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ-கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

 


திருப்பூர் மங்கலத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ-கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !



பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர்-6) முன்னிட்டு திருப்பூர் மாவட்டம்  மங்கலத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே எஸ்.டி.பி.ஐ   கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஹாரிஸ் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ-கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்  அப்துல் ஹக்கீம், திருப்பூர் தெற்கு மாவட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சையது அபுதாஹிர், பைசல் அஹமத் மற்றும் எஸ்.டி.பி.ஐ-கட்சியின்  பல்லடம் தொகுதி பொருளாளர் ஜே.நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ-கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர்அஹமது வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ-கட்சியின் மாநில பேச்சாளர் கோவை காதர் ,விமன்ஸ் இண்டியா மூவ்மெண்ட் அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் சஹானா, ஆகிய கண்டன உரையாற்றினார்கள்.



எஸ்.டி.பி.ஐ-கட்சியின் அவிநாசி தொகுதி தலைவர் முஸ்தபா நன்றியுரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து அயோத்தியில் பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் மீண்டும் புதிய பாபர் மசூதி கட்டப்படும் என பேசினார்கள்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad