மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டோருக்கு திருப்பூரிலிருந்து உணவு பொருட்கள் அமைச்சர்கள் , மேயர் அனுப்பி வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி, மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை மாநகர மக்களுக்கு உதவிட திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து 3 கண்டெய்னர் லாரி அளவிலான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் 5 ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2 வது முறையாக 6 கன்டெய்னர் அளவிலான உணவுப் பொருட்கள், குடிநீர்,போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் இஆப, மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இஆப , துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் அந்த வாகனங்களின் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment