திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது. மக்களின் தேவைகளை நுணுக்கமாக கவனித்து அதற்குரிய தீர்வுகளை வழங்க தமிழ்நாடு அரசு "மக்களுடன் முதல்வர்" திட்டம் உருவாகி இருக்கிறது.
கோவையில் இத்திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் 18-12-2023 அன்று தொடங்கி வைத்த நிலையில், இதன் தொடர்ச்சியாக திருப்பூர் பாளையங்காடு உமையா திருமண மண்டபம், பாண்டியன் நகர் V.S.திருமண மண்டபம், பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ, மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார், மாநில தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமான டி.கே. டி .மு .நாகராசன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தொடங்கி வைத்தார்கள் .
மேலும் மக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment