கடும் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு உடுமலை நகராட்சியின் மீட்புக் குழு பயணம் !
பிக்ஜாம் புயல் சென்னை நகரம் அதையொட்டி உள்ள மாவட்டங்களை புரட்டி போட்டு விட்டது. இதன் கோர தாண்டவத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு க்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு கடைசியில் பயங்கர காற்றுடன் கொண்ட புயல் சென்னையை மழை நீரில் மிதக்க வைத்துள்ளது. மழைநீர் வடிந்த பின்னர் சுகாதார பணியாளர்கள் அதிக அளவில் தேவைபடும் நிலையில் இந்த சுகாதார பணிகளில் ஈடுபட திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அடங்கிய மீட்பு குழுவினர் இன்று 4-12-2023 மாலை சென்னை புறப்பட்டனர். உடுமலை நகர மன்ற தலைவர் மு.மத்தீன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீட்பு குழுவினர் சென்ற வாகனங்களை வழி அனுப்பி வைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment