அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பப் போட்டி நடைபெற்றது.
மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாநில அளவிலான 450 வீரர்கள் பங்கேற்ற சிலம்பப் போட்டி நடைபெற்றது. இந்த சிலம்பாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வடக்கு மாவட்ட செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ , வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , மாநில தொமுச துணை செயலாளரும், தெற்கு மாநகர செயலாளர், டி கே டி முநாகராசன் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் விஸ்வநாதன் ,வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி , விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ் ,மாவட்ட துணை செயலாளர் நந்தினி , பகுதி கழகச் செயலாளர் மியாமி அய்யப்பன் , மாநகர விளையாட்டு அணி அமைப்பாளர்கள் தேவராஜ்,பாலன் , வட்ட கழக செயலாளர் ராமகிருஷ்ணன் , எல் பி எஃப் பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment