திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் இலவச மனு எழுதிக் கொடுக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தேர்தல் ஆணைய கூடாரம்.
திருப்பூர் வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் சான்றிதழ்களை பெறவும் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுக்கவும் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக தற்போது புகைப்படம் உள்ள இடத்தில் தாலுக்கா அலுவலகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் இலவச மனு எழுதிக் கொடுக்கும் இடமாக இருந்தது தற்போது தேர்தல் ஆணையம் ஓட்டு பதிவு இயந்திரம் மூலம் ஓட்டு போடுவது பற்றி பொதுமக்களுக்கு செய் முறை விளக்கத்தை காண்பிப்பதற்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள இலவச மனு மனு எழுதிக் கொடுக்கும் இடத்தில் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மனுக்கள் எழுத வரும் பொது மக்கள் இலவசமாக எழுதிக் கொள்ள முடியாமல் புரோக்கர்களையே நாட வேண்டியதில்லை இதை இப்படியே விட்டால் மீண்டும் புரோக்கர்களின் ஆதிக்கம் தலை தூக்கி விடும் ஆதலால் உடனடியாக இந்த கூடாரத்தை அப்புறப்படுத்தி இடத்தில் வைத்துவிட்டு இது இலவச மனு எழுதும் இடமாகவே என்பதே பொதுமக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment