தாராபுரம் அருகே தேங்கிய குப்பை நோய் தொற்று பரவும்.
தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் அருகே சாலை ஓரம் வெளியாட்களால் கொட்டப்பட்டு வரும் குப்பைகளுக்கு நிரந்த தீர்வு காண ஊராட்சி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி பகுதியில் உருவாகும் குப்பைகள் மற்றும் வெளியாட்கள் மூலம் பகுதி மக்கள் சேர்ந்து உடுமலை சாலையில் கொண்டரசம்பாளையம் பிரிவிலிருந்து பிரிந்து அலங்கியம் சாலையில் இணைக்கும் சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே காய்கறி அழுகிய குப்பைகள்,சாலையோரம் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில் உற்பத்தியாகும் கோழி கழிவுகள், ஆட்டு கழிவுகள் மர மட்டை குப்பைகளை சாலையோரம் இரவு நேரங்களில் கொண்டி வருகின்றனர்.
குப்பைகளை சாலையில் கொண்டுவந்து இறைச்சி கழிவுகளை போட்டு விட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும் மர்ம நபர்கள் குப்பைகளில் தீ வைத்து சென்று விடுவதால் அவை கொளுந்து விட்டு எரிந்து புகை சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் புகையின் சுவாசம் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசிவருவதால் இரவில் துர்நாற்றத்தை சுவாசித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment