புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளில் இருந்து மதிய உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாளில் இருந்து மதிய உணவு வழங்கிவரும் பங்க் மகேஷ்குமார் இவர் அதிமுக திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்அணி மாவட்ட செயலாளராகவும் தாராபுரம் அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார்.புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் திவீர ரசிகரான இவர் ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்வது வழக்கம். கொரோனா காலக்கட்டத்திலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.இந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதியில் இருந்து தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு சுமார் 100க்கு மேற்ப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வை செய்து வருகிறார்.இந்நிகழ்வை அறிந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பங்க் மகேஷ்குமாரை பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment