அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் உயிர் வாழ உணவு/ உற்பத்தி செய்யும் விவசாயமே முதன்மையானது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2024

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் உயிர் வாழ உணவு/ உற்பத்தி செய்யும் விவசாயமே முதன்மையானது.

 


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் உயிர் வாழ உணவு/ உற்பத்தி செய்யும் விவசாயமே முதன்மையானது.



நாட்டின் தொழில் வளம் பெருக தொழிலாளர்களே முதன்மையானவர்கள் என்ற அடிப்படையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்தும் அவர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பிராட்வே காலனியில் உள்ள சங்கத் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி .சுப்பிரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட ,மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை ஜி.கே விவசாய மணி( எ)ஜி. சுப்பிரமணி அவர்கள் வழங்கினார். மேலும் வரும் 26-1- 2024 அன்று குடியரசு தின விழாவை சங்க தலைமை அலுவலகத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad