ஏடிஎம் மையத்தில் தவறவிட்ட பணம் 20ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எஸ். பி. ஐ ஏ. டி. எம் இயந்திரத்தில் தவறவிட்ட ஓய்வு பெற்ற அரசு கண்டக்டர் பணம் ரூ. 20 ஆயிரத்தை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
தாராபுரம் நேத்தாஜி தெருவை சேர்ந்த முத்துசாமி (65) இவர் அரசு பஸ் ஓய்வு பெற்ற கண்டக்டர். முத்துசாமி பொள்ளாச்சி ரவுண்டானா பகுதியில் எஸ்.பி.ஐ, ஏ.டி. எம் மையத்தில் பணம் ரூ. 20 ஆயிரம் எடுத்து அதனை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையறிந்த முத்துசாமி பணத்தை ஏ. டி. எம் இயந்திரத்தின் மீது வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு குண்டடம் பகுதியை சேர்ந்த தனபால் (45) இவர் கோவையில் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சொந்த வேலைக்காக தாராபுரம் வந்த தனபால் அந்த ஏ. டி. எம் மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கு இயந்திரத்தின் மீது பணம் இருப்பதை கண்டதும் அதனை எடுத்த தனபால் போலீசில் ஒப்படைத்து இதனை உரியவரிடம் ஒப்படைக்கும்மாறு கூறி விட்டு செல்போன் நெம்பரை கொடுத்து சென்றார். பிறகு போலீசார் ஏ. டி. எம் இயந்திரத்தில் உள்ள சி. சி. டிவி. கேமிராவை பரிசோதனை செய்து விலாசத்தை அறிந்த போது அவர் முத்துசாமி என தெரியவந்தது.பிறகு அவரை அழைத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் பணம் ரூ. 20 ஆயிரத்தை வழங்கினார். பணத்தைபெற்றுக் கொண்டு பணத்தை ஒப்படைத்த தன பாலுக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment