இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஜனவரி 26 ல் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி 32- வது வார்டு கோல்டன்நகர் பிரிவு சஞ்சய் நகர் அருகே உள்ள மண்ணரை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் தலைவர் சபீர்அகமது அவர்களது ஆணைக்கிணங்க கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறை செயல் தலைவருமான எஸ்.எம்.முன்னா அவர்கள் கொடியேற்றி வைத்தார் இந்த நிகழ்வில் ரம்ஜான்அலி. இலியாஸ்,தம்பிஸ்,சேக்சலிம்,ராசித்,ரியாஸ்,முகமதுரஃபீக்,தாஜ்,ஷாகுல்,பாண்டி, நிர்வாகிகள். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடியும், இனிப்பும் வழங்கப்பட்டது . அனைவரும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment