தளபதி விஜய் மக்கள் இயக்கம் தொழிற்சங்க கிளை துவக்க விழா!மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 31 January 2024

தளபதி விஜய் மக்கள் இயக்கம் தொழிற்சங்க கிளை துவக்க விழா!மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 


தளபதி விஜய் மக்கள் இயக்கம் தொழிற்சங்க கிளை துவக்க விழா!மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 


தளபதி  விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தன் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் வழிகாட்டுதலின்படி

 

திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் தொகுதி, தாராபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமலை பாளையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்க கிளை துவக்கப்பட்டது. தொழிற்சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது.


புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மற்றும் நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு குடங்கள் ,பெரியவர்களுக்கு வேட்டி சட்டை வழங்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.


தளபதி விஜய் மக்கள் இயக்கம் புதிய கிளை மற்றும் பெயர் பலகை திறப்பு விழாவில் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர்  சதீஷ்குமார், தாராபுரம் நகர இணையதள அணி தலைவர்  ஹரிகரன்,மக்கள் இயக்க நிர்வாகி அறிவழகன்  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் . மேலும் தாராபுரம் நகர தொழிற்சங்க தலைவர் ஸ்ரீகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் திருமலை பாளையம் தொழிற்சங்க தலைவர்  மதன் அவர்கள் தலைமையில் தாராபுரம் தொகுதி  திருமலை பாளையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்க  கிளை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad