திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஸ்ரீநகர் கிளை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2024

திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஸ்ரீநகர் கிளை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.

 


திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஸ்ரீநகர் கிளை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்  வடக்கு ஸ்ரீநகர் பள்ளிவாசல் அருகில் உள்ள உதயம் ஆரம்ப நர்சரிபள்ளியில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டம் ஸ்ரீநகர் கிளை மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை , லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இருதய பரிசோதனை & கண் மருத்துவ முகாம்  கிளை தலைவர் N.முகமது ஆசிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் A.நசீர்தீன் அவர்கள் முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக கிளையின் IPP செயலாளர் M.முகமது உசேன் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார்.


 கிளை பொருளாளர் A.முகமது சித்திக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


இந்த மருத்துவ முகாமை தமுமுக மாநிலச் செயலாளர் M.ஹமீது அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.


சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் மாயவரம் அமீன் அவர்கள் முகாமில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.


இறுதியாக கிளை மருத்துவ அணி  செயலாளர் A.சமீர் அவர்கள் நன்றி உரை வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் முகாம் ஒருங்கிணைப்பாளர் தமீம்அன்சாரி அவர்களும், 16வது வார்டு கவுன்சிலர்  கனகராஜ் அவர்களும், 15வது வார்டு திமுக பகுதி செயலாளர் சகோதரர் குட்டி குமார் அவர்களும், மஸ்ஜிதே மதீனா ஸ்ரீநகர் பள்ளிவாசல் தலைவர் B.நூர்தின் அவர்களும் துணைத் தலைவர் K.அப்துல் கரீம் அவர்களும் செயலாளர் A.Mஅப்துல் ரகுமான் அவர்களும் மேலும் மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். 


இந்த மருத்துவ முகாமில் 500 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தார்கள்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad