தாராபுரம் நகர பாஜக சார்பில் உரிமம் இல்லாத பார்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தாராபுரம் ஜன-04 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் உரிமம் இல்லாத பார்கள் பல இயங்கி வருகிறது மேலும் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகிறது. பொதுமக்கள் தொடர்ந்து தாராபுரம் நகர பாஜகவிடம் கோரிக்கை வைத்த காரணத்தினால் இத்தகைய செயலை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் இல்லை எனில் தாராபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தாராபுரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை தாராபுரம் நகர தலைவர் விநாயகா சதீஷ் அவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அளித்தனர்
No comments:
Post a Comment