அனுப்பர்பாளையம் திருப்பூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 110 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 February 2024

அனுப்பர்பாளையம் திருப்பூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 110 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

 


அனுப்பர்பாளையம் திருப்பூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 110 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. 



திருப்பூர்  அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் 110 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  இந்த நிகழ்வில் பகுதி திமுக செயலாளர் கொ. ராமதாஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மாவட்ட விவசாய அணி தலைவர் மு. ரத்தினசாமி, பொருளாளர் ந. வேலுச்சாமி, உதவி பொருளாளர் எஸ் மணிமாறன் துணைத் தலைவர் கோட்டா என் பாலகிருஷ்ணன் (எக்ஸ் எம்சி,) , எஸ் பிரகதீஸ்வரன், எஸ் கஜேந்திரன் முன்னாள் மாணவர் பேரவை, வட்டக் கழக செயலாளர் சண்முகம் 11 வது வட்ட கழக செயலாளர் ஐயம்பெருமாள் மகளிர் அணி கௌரி அமீர் மற்றும் இதர நிர்வாகிகள், வட்டார கல்வி அலுவலர் கே சின்னகண்ணு, ஆசிரியை கு. ஞானலட்சுமி, பதிநாலாவது வார்டு கவுன்சிலர் சகுந்தலா ஈஸ்வரன், பத்தாவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு, பதிமூன்றாவது வார்டு கவுன்சிலர் அனுசுயா தேவி, வாழ்த்துரை வழங்கினார்கள், மற்றும் ஆசிரிய பெருமக்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மற்றும் மாணவ மாணவியரின் கண்கவர் நடன நாட்டிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடைபெற்றது. நடன நிகழ்ச்சிகளை ஆசிரிய பெருமக்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு  சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad