ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழக்காதீர்கள் அணைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி கே விவசாய மணி(எ) ஜி.சுப்பிரமணி எச்சரிக்கை
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பிராட்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் சங்க தலைவர் ஜி.கே .விவசாயமணி (ஏ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது . அப்போது அவர் பேசியதாவது சில காலங்களுக்கு முன்பெல்லாம் மோசடி கும்பல் ஈமு கோழி வளர்ப்பு திட்டம், தேக்கு மரம் வளர்ப்பு திட்டம் ,பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விடுகின்றனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியை துணை கொண்டு மோசடி செய்யும் நபர்கள் அதிக வட்டி தருவதாகவும் அரசு திட்டங்களை முறைகேடாக வங்கி கணக்கு உள்ளவர்களிடம் ஏமாற்றுவதும் பரவலாக நடைபெறுகிறது இதில் அப்பாவி பொதுமக்கள் ஏமாந்து தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டு உள்ள நிலை உள்ளது இதை கருத்தில் கொண்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர் இந்த மோசடி கும்பல்களிடம் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் மங்கலம் அருகில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சங்கத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணி அவர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளும் மகளிர் அணி நிர்வாகிகளும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment