திருப்பூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 14வது வார்டு பிரசாத் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி நூற்றாண்டு விழா பள்ளியின் 110 வது ஆண்டு விழா திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் நான் தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிகள் முடிவுற இரவு 10 மணிக்கு மேலாகியதால் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவதை நிறுத்தி வைத்த நிலையில் தற்போது கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளரும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமாகிய மு.ரத்தினசாமி தலைமை ஆசிரியை கு.ஞானலட்சுமி , பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ந. வேலுச்சாமி, பொருளாளர் எஸ். மணிமாறன், துணைத் தலைவர் கோட்டா என். பாலகிருஷ்ணன் (எக்ஸ் எம்சி), எஸ். பிரகதீஸ்வரன் பெற்றோர் ஆசிரியர் சங்கம் , எஸ். கஜேந்திரன் முன்னாள் மாணவர் பேரவை மற்றும் லோகு , பரிசு பொருட்களை வழங்கிய பாத்திரக்கடை உரிமையாளர்கள் ,
சபரி பாத்திர கடை ஜெயகாந்தன் , முருகன் பாத்திரக்கடை சிதம்பரம் , கணபதி பாத்திரக்கடை பார்த்திபன் மற்றும் இந்த நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்களும் 14 வது வார்டு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment