திருப்பூர் 14 வது வார்டில் 40 ம் நமதே! நாடும் நமதே!! திமுக தேர்தல் பரப்புரை வாகனம் வருகை .
வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக தனது அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் விதமாக ஒளி, ஒளி அமைப்பு கொண்ட 40 நமதே நாடும் நமதே பிரச்சார வாகனம் மூலம் நாடெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் திருப்பூர் வடக்கு மாவட்டம் 14 வது வார்டு பகுதியில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி பிரச்சார வாகனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையை பொது மக்களிடையே ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் திருப்பூர் திமுக மாவட்ட ,மாநகர, பகுதி, அணி நிர்வாகிகள் 14 வது வார்டு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் வார்டு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒளி, ஒலி பிரச்சார வாகனம் மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment