நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம் சார்பாக இரத்ததான முகாம்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரிய பாளையம் பகுதியிலுள்ள நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள சர்க்கார் பெரிய பாளையம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என 34 பேர் பங்கேற்று இரத்த தானம் செய்தனர் அவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக இரத்ததான கொடையாளர்களுக்கான 2024 ம் ஆண்டுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ரத்தம் கொடுப்பது மீண்டும் , மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும் அனைவரும் ரத்தம் கொடுத்தால் உடலுக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த முகாமில் 34 பேர் ரத்ததானம் செய்தனர் மேலும் இலவச மருத்துவ முகாமில் 50 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஊத்துக்குளி காவல் நிலைய ஆய்வாளா் திருமதி கே.கவிதா அவர்கள், திருப்பூர் மாநகராட்சிக்கு மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள், குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார வளர்ச்சி அலுவலர் டாக்டர் எஸ். யமுனா தேவி எம் பிபிஎஸ் அவர்கள் , ஊத்துக்குளி அரசு மருத்துவனை மருத்துவர் டிபி. கார்த்திக் எம் பிபிஎஸ்,டிஏ அவர்கள், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment