நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு மேயரிடம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-4, வார்டு -53 குப்பாண்டம்பாளையம் ஓடை முதல் சக்தி அபார்ட்மெண்ட் வரை மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.51 இலட்சத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.17 இலட்சத்திற்கான வரைவோலையை மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் அவர்களிடம் அப்பகுதி மக்கள் வழங்கினர்.
அவர்களுக்கு திருப்பூர் மாநகர மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் மேயர் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பை செலுத்த உறுதுணையாக இருந்து ஏற்பாடு செய்த வீரபாண்டி பகுதி கழகச் செயலாளர் கோவிந்தராஜ் அவர்களும்,56-வது மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment