திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டு சாலை சாக்கடை வசதிகள் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் பேனர் வைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி யாக அறிவித்து பாதாள சாக்கடை தனியார் கட்டண குடிநீர் இணைப்பு குழாய் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகளை மீண்டும் தனியார் நிறுவனங்கள் சீர்படுத்தாமல் இருக்கும் நிலை மாநகராட்சி முழுவதும் உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சி 25 வது வட்டம் லோட்டஸ் கார்டன் மற்றும் பாட்டையப்பா நகர் பகுதிகளில் சாலைகள், சாக்கடை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உடனடியாக கட்ட வேண்டும் இல்லையேல் அபராதம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் மாநகராட்சி சாலை, சாக்கடை குடிநீர் வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது பற்றி திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டனக் குரல் முழக்கத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:
Post a Comment