முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா அன்னூர் அஇஅதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 February 2024

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா அன்னூர் அஇஅதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது


முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா அன்னூர் அஇஅதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது , முன்னாள் முதலமைச்சர், பொதுச்செயலாளர்  எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க  முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எம் எல் ஏ அவர்கள் ஆலோசனையின்படி 


கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிஆர்ஜி.அருண்குமார் எம் எல் ஏ, கழக அமைப்புச் செயலாளர்,அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ப.தனபால்,


வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி. ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டி. கே. அமுல் கந்தசாமி ஆகியோர் ஆலோசனைபடி 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் இதயதெய்வம்


ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அன்னூர் வடக்கு ஒன்றியம் மற்றும் அன்னுர் நகர அஇஅதிமுக  சார்பாக பயணியர் மாளிகை முன்பு கழக கொடிஏற்றி புரட்சித்தலைவிஅம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்வில் வடக்கு ஒன்றிய, நகர கழக, வார்டு, கிளைகழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad