திருப்பூரில் மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை அமைச்சர்கள் ஆய்வு!
புதிய குடிநீர் திட்ட துவக்க விழா மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளதை முன்னிட்டு, விழா நடைபெற உள்ள இடத்தை இன்று மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களும்,மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும், மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும், வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ்MLA அவர்களும் மற்றும் மாண்புமிகு மேயர் தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி.மு.நாகராசன், தெற்கு மாவட்ட செயலாளர்இல பத்மநாபன் மக்கள் பிரதிநிதிகளும் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர். மேலும்,அன்னூர் குறுக்கிலியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நீரேற்று நிலையம் ஆகியவற்றை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment