அவிநாசியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
முன்னாள் முதல்வரும் அ.இ. அ.தி.மு.க நிறுவன தலைவருமான எம்ஜிஆர் அவர்களைப் பற்றி இழிவாக பேசிய ஆண்டி முத்து ராசா எம்பியை கண்டித்து அ.இ. அ.தி.மு.க சார்பில் அவிநாசியில் முன்னாள் முதல்வரும் அ.இ. அ.தி.மு.க பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார்கள் உடன் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாநில மாவட்ட மாநகர நகர பேரூராட்சி ஊராட்சி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்பியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment