திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வழிகாட்டுதல் பேரில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் பரவலாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில் இதில் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு பகுதி முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகின்ற நிலையில் திருப்பூர் வடக்கு புதிய பேருந்து நிலையம் பிஎன் ரோடு, பிச்சம்பாளையம் ,தோட்டத்து பாளையம் மற்றும் பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் தன்னெழுச்சியாக இளைஞர்கள், பெண்கள், தங்களை நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment