தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் எஸ். பாலமுருகன் அவர்கள் தலைமையில் அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது.
நடிகர் விஜய் ,தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி அமைத்து தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டு அறிவித்துள்ளார். இதையொட்டி தமிழக அரசியல் களம் பரபரப்பானது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவன தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பெயரில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல் படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் மத்திய மாவட்ட தலைவர் எஸ் பாலமுருகன் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதில் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் பாத்திர தொழிற்சங்க கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் பெயர் பலகையை மத்திய மாவட்ட தலைவர் எஸ். பாலமுருகன் அவர்கள் திறந்து வைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று இந்த பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை நேரடியாக அவர்களின் வீட்டில் சந்தித்து விருப்பமுள்ளவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பாண்டியன், பாபு, கணேஷ், சிலம்பு, ராயபுரம் பகுதி தலைவர் ஹரி, நிர்வாகிகள் நவீன், கார்ல் மார்க்ஸ், அரவிந்த், மாணவரணி பகுதி தலைவர் கே .எம். ஈசன் மற்றும் டி. நாகராஜ், வி. கோவிந்தராஜ், வி. வேலுமணி, சி .கார்த்திக், எஸ். பிரகாஷ் , எஸ். மணிகண்டன், ஜி. சரவணகுமார், எஸ். செந்தில், எஸ். ரமேஷ், கே. மனோகர், கேகௌதம், கே. மதன், வாசு , கேசவன், 14வது வார்டு எம். பிரகாஷ் ,எஸ். கோகுல் ,பி .பாரதி கண்ணன்,எம் ரங்கசாமி மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment