அனைத்து விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் !
தமிழகம் எங்கும் விவசாய மற்றும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்திந்திய விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை திருப்பூரில் பிராட்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் சங்க தலைவர் ஜி.கே. விவசாய மணி(எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். புதிய நிர்வாகிகளுக்கு சங்க தலைவர் ஜி.கே.விவசாயமணி அவர்கள் பச்சை துண்டுகளை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட ,மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment