நீரோடை நடத்தும் இலக்கிய விழா நீரோடை இலக்கிய விருது வழங்கும் விழா, அவிநாசியில் நடைபெற்றது.
நீரோடை அமைப்பு நடத்தும் இலக்கிய விழா மற்றும் கதை கேளுங்கள் நிகழ்ச்சி மற்றும் கதை சொல்லும் நிகழ்வில் தவத்திரு. சுந்தரராச அடிகளார் தலைமையில் அவிநாசி செங்குந்தர் திருமண மண்டபத்தில் இந்த விழாவில் நீரோடை மகேஸ் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பார்களாக தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் பூர்ணிமா மற்றும் பேராசிரியர் எம்.பி. ராமகிருஷ்ணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தோழர் இ.அங்கு லட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஜெயா தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பூர்ணிமா அவர்களுக்கு பேரா.எம்.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் கனவு மாத இதழை நினைவு பரிசாக வழங்கினார். மேலும் தோழர் அங்குலட்சுமி அவர்கள் செய்தி வாசிப்பாளர் பூர்ணிமா அவர்களுக்கு போராளி என்ற நூலினை நினைவு பரிசாக வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment