தாராபுரம் பேருந்து நிலையத்தில் தீ விபத்து!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருபவர்கள் பாலகிருஷ்ணன், பாலாமணி, ராமசாமி, கிஷோர் குமார், அதேபோல செல்போன் கடை நடத்தி வருபவர் தஸ்லிம், இளங்கோ, ஆகியோர். நேற்று இரவு 10, மணிக்கு கடைகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர். பிறகு பேக்கரி கடை நடத்துபவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடைகளை திறக்க வந்தனர். அப்போது அடைக்கப்பட்ட கடைகளின் ஷட்டரில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10,க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயினை தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர். ஒரு மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகளில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் பேக்கரியில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, பேன், ஏர் கூலர், டிவி உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் கூல்ட்ரிங்ஸ் தின்பண்டங்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது இந்த திடீர் தீ விபத்தில் 20, லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.
No comments:
Post a Comment