அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா நூற்றாண்டு பிறந்தநாள் விழா
தன் வாழ்நாளில் முழு மையாக விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்தும், போராட்ட களத்தில் தன்னை அர்ப்பணித்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில்
நிறுவனத் தலைவர் திரு.G.K.விவசாயமணி (எ) G.சுப்பிரமணி அவர்கள் தலைமையில்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அய்யா அவர்கள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் சிறப்புரை ஆற்றினார். பல்வேறு நிர்வாகிகள் கருத்துரையாற்றினர் இந்த நிகழ்வில் அனைத்து மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment