திருப்பூர் மாநகராட்சி திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலைகள்? மக்கள் வரிப்பணம் வீண் ! ஆம்ஆத்மி கட்சி கண்டனம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 February 2024

திருப்பூர் மாநகராட்சி திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலைகள்? மக்கள் வரிப்பணம் வீண் ! ஆம்ஆத்மி கட்சி கண்டனம்.

 


திருப்பூர் மாநகராட்சி  திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலைகள்? மக்கள் வரிப்பணம் வீண் ! ஆம்ஆத்மி கட்சி கண்டனம்.



திருப்பூர் மாநகராட்சி பல பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் சாலை பணிகள் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் நிறைவு பெற்ற  சாலைகள் மீண்டும் தோண்டப்பட்டுகின்றது. இதுபற்றி ஆம் ஆத்மி பொறுப்பாளரும், சமூக‌ ஆர்வலருமான சுந்தரபாண்டியன் அவர்கள் கூறியதாவது திருப்பூர் மாநகராட்சி 3 வது மண்டலம் 43 வது வார்டு திருப்பூர் செரீப் காலணி பிரதான சாலை  ஜார்கண்ட் கவர்னரின் அண்ணன் வீடு இந்த பகுதியில் உள்ளது.இஙகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைத்தார்கள். கொஞ்சம் நாள் நல்லா இருந்தது ஒரே மாதத்தில் அங்கங்கே பெயர்ந்து ரோடு மோசமாக போய்விட்டது. இந்த சூழ்நிலையில் அதே கான்கிரீட் சாலையை உடைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் எதற்கு என்று கேட்டபோது குழாய் பதிப்பதற்காக உடைக்கிறோம் என்கிறார்கள். ஆக கான்கிரீட் சாலை அமைக்கும் முன்பே குழாய் எல்லாம் பதித்து சாக்கடை வேலையெல்லாம் முடித்து விட்டு கடைசியாக சாலை அமைத்திருந்தால் இந்த நிலை வருமா?



புதிதாக சாலை போடுவதற்கு ஒரு செலவு, அதை உடைத்து எடுத்து மராமத்து பணி செய்ய ஒரு செலவு. ஆக மக்கள் வரிப்பணத்தை திருப்பூரில் திட்டமிடல் இல்லாமல் வேலை செய்து வீணடிக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.



திருப்பூர் மாநகராட்சியும் சரி, குடிநீர் வடிகால்துறையும் சரி, மின்வாரியமும் சரி திருப்பூரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் என்பது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலை. திருப்பூரில் பல இடங்களில் இதே நிலைதான். மக்கள் வரி பணத்தை வீனடிப்பதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad