திமுக தொமுச சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 March 2024

திமுக தொமுச சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 


திமுக தொமுச சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  வருகின்ற பாராளுமன்ற தேர்தலை ( 2024 ) முன்னிட்டு திமுக மாண்புமிகு முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் திருப்பூர் மற்றும் ஈரோடு தொமுச தொழிற்சங்கத்தின் பாராளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மாநில தொமுச துணைச் செயலாளர் டி கே டி மு. நாகராசன் தலைமையிலும், ஈரோடு மாவட்ட கவுன்சில் செயலாளர் சே கோபால் வரவேற்புரை ஆற்றினார் தொமுச மாநில பொதுச் செயலாளர் மு. சண்முகம் எம்பி , தெற்கு சட்டமன்ற உறுப்பினர், வடக்கு மாவட்ட செயலாளருமான க. செல்வராஜ் எம்எல்ஏ, தொமுச பேரவை பொருளாளர் கி. நடராசன், மாண்புமிகு  மேயர் ந.தினேஷ்குமார்,

தொமுச மாநில துணைத்தலைவர் மூன்றாம் மண்டல தலைவர் சி கோவிந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட டாஸ் மார்க்  தொமுச செயலாளர் ஜெ. தமிழரசு நன்றி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக சங்கத்தின் தலைவரும், 14 வது வட்ட கழக செயலாளரும், மாவட்ட விவசாய அணி பொறுப்பாளருமான மு.ரத்தினசாமி தலைமையில் பாத்திர சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் பகுதி திமுக துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட, மாநகர ,பகுதி, திமுக அணி பொறுப்பாளர்களும், 14வது வட்டத்தின் பொறுப்பாளர்களும் வாகனங்களில் திரளாக சென்று கலந்து கொண்டனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad