தாராபுரத்தில் 13,கிலோ வெள்ளி பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 13, கிலோ எடையுள்ள ரூ. 15, லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கையில்
கோயம்புத்தூர் மாவட்டம், பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் மாருதி டிசையர் காரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி பொருட்கள் 13 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது தேர்தல் உதவி அலுவலர் செந்தில் அரசன் நடவடிக்கை எடுத்தார் அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 கிலோ வெள்ளி தாராபுரம் சார் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை கொடுத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் மருதாச்சலத்திடம் தெரிவித்தனர்.இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment