தாராபுரம் ஆடு திருடிய நபர் கைது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம் அருகே ஆச்சியூரை சேர்ந்த கார்த்திக் (32) விவசாயி, இவர் அந்த பகுதியில் 10 க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பி வைத்துவிட்டு மாலையில் பட்டியல் அடைப்பது வழக்கம். நேற்று காலை கார்த்திக் ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்து விட பட்டிக்கு சென்று உள்ளார். அப்போது 10 ஆடுகளில் ஒரு ஆடு குறைந்தது இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கார்த்திக் உடனடியாக தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் ஆடு திருடிய நபரை போலீசார் தேடி வந்த நிலையில் பழனி பகுதியில் சந்தேகத்தின் பேரில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தாராபுரம் அருகே ஆச்சியூரை பகுதியில் கார்த்திக் என்பவர் பட்டியில் ஆடு திருடியதாக ஒப்புக்கொண்டார். விசாரணையில் பழனி தாலுக்கா பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (52) என்பது தெரிய வந்தது. அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment