மின் கம்பியில் உரசி காயமடைந்த மயில் கிராம நிர்வாக உதவியாளர் பத்திரமாக மீட்டார்.
திருப்பூர் அருகே உள்ள சேவூர் அருகே பாப்பான்குளம் கிராமம் போதம்பாளையம் சொக்கநாதர் கோவிலில் நேற்று தாழ்வாக பறந்து வந்த ஆண் மயில் மின்கம்பி மீது உரசி காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்திருந்தது . இதை பார்த்த பாப்பான்குளம் கிராம நிர்வாக உதவியாளர் வினோத் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தார் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காலில் காயமடைந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை செய்யப்பட்டு அடிபட்ட மயிலை எடுத்து சென்றனர். அப்போது வனத்துறையினர் அடிபட்ட மயில் காயங்கள் சரியான உடன் வன பகுதியில் விடுவதாக கூறினர். மயிலை மீட்ட கிராம நிர்வாக உதவியாளர் வினோத்தை அந்த பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment