தமிழக வெற்றிக் கழகம் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பாக சிறப்பு பூஜை, அன்னதானம், துப்புரவு தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினர்
நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் கட்சியில் பொது மக்கள் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதற்கு புதிய ஆப் அறிவித்தார் இதை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை சார்பில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் பதினேழாவது வார்டு பாரதி நகர் பகுதி கழகம் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.சுகுமார் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் லோகு, கே.கார்த்திக், எஸ்.பிரேம்குமார் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம், துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மத்திய மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அப்பாஸ்,சதீஷ், வசந்த், பிரகாஷ் ஹரிஷ்,பிரசாந்த்,பிரகாஷ், முகில்,கருப்புசாமி பகுதி கழகம் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment