அதிமுக சார்பில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக ஆளும் திமுக அரசை கண்டித்து அவற்றை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து பொறுப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக திருப்பூர் பதினைந்து வேலம்பாளையம் பகுதி அதிமுக சார்பில் அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அலுவலகம் முன்புறம் பத்தாவது வார்டு, பதினொன்றாவது வார்டு, பன்னிரண்டாவது வார்டு, இருபத்தி ஐந்தாவது வார்டு, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசை கண்டித்தும் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment