வியாபாரிகள் கொள்முதல் தேவைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத் தலைவர் தலைமை தேர்தல் கமிஷனருக்கு வேண்டுகோள்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 March 2024

வியாபாரிகள் கொள்முதல் தேவைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத் தலைவர் தலைமை தேர்தல் கமிஷனருக்கு வேண்டுகோள்!

 


வியாபாரிகள் கொள்முதல் தேவைக்கு  ஒரு லட்சம் ரூபாய் வரையில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்  கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத் தலைவர் தலைமை தேர்தல் கமிஷனருக்கு வேண்டுகோள்!


நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஐம்பதாயிரம் வரையில் மட்டுமே பணமாக பொதுமக்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் விதியால் மிகவும் பாதிப்படைவது நடுத்தர வியாபாரிகள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் தான் எனவே அதை மறு பரிசீலனை செய்து வியாபாரிகள் ஒரு லட்சம் வரை பணமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில செயலாளருமான திருப்பூர் மகிஷா ரமேஷ் குமார் அவர்கள் தேர்தல் கமிஷன் தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் திருப்பூர் மாவட்டத்தில் சிறு குரு வியாபாரிகள் மற்றும் நடுத்தர கடை நடத்தி வருபவர்கள் தங்களது கடையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சென்று தான் கொள்முதல் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது மேலும் வியாபாரிகள் ரொக்கமாக பணம் கொண்டு வந்து கடைவீதியில் அரிசி மளிகை காய்கறி போன்ற பொருட்கள் தினமும் கொள்முதல் செய்து வருவது வழக்கம் மேலும்

 2019 தேர்தல் காலகட்டங்களில் மளிகை பொருட்களின் விலைகளை விட இன்றைய விலைகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் போது அன்றைய காலகட்டத்தில் தேர்தல் இறுதி முறைகளில் பின்பற்றப்பட்ட அதே நிலையை தற்போதும் அறிவித்துள்ளதை மாற்றி இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார் போல் தேர்தல் விதிமுறைகளை மாற்றி வியாபாரிகளை மனதில் வைத்து ஐம்பதாயிரம் என்ற விதியை சற்று தளர்த்தி ஒரு லட்சம் ரொக்க பணம்  கொள்முதலுக்கு வியாபாரிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு சரியான ஆவணங்களை அதிகாரிகள் பார்த்ததும் அவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் உயர் அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்று சாக்கு போக்கு கூறி வியாபாரிகளை அலையவிடாமல் உடனே ஆவனங்களை மற்றும் பணத்தை ஒப்படைத்து அனுப்ப வேண்டும் 

சரியான ஆவணங்கள் இருந்தும் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ள தனி பிரிவு மற்றும் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் மேலும் தேர்தல் விதிமுறைகள் தவறும் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் பணம் வட்டுவாடா செய்யும் கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டுமே தவிர அன்றாடம் வியாபாரம் செய்து வாழும் வியாபாரிகளை பாதிக்காத வண்ணம் தளர்வுகள் இருக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனுக்கு கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன தலைவரும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில செயலாளர் திருப்பூர் மோகிஷா ரமேஷ் குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் மற்றும் திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad