பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் மடத்துக்குளம் ஈஸ்வரசாமி திமுக தலைமை அறிவிப்பு !
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமாகிய மு.க. ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் , திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளருமான
கே. ஈஸ்வரசாமி அவர்களை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவித்துள்ளார். வேட்பாளர்
கே ஈஸ்வரசாமி மடத்துக்குளம் வட்டம் மைவாடி ஊராட்சி கருப்புசாமி புதூரை சேர்ந்த கருப்புசாமி கவுண்டர் மகன் ஆவார். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் , நூற்பாலை, ரியல் எஸ்டேட் , இருசக்கர வாகன டீலர், மற்றும் கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா பள்ளி தாளாளர் ,சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மக்களிடையே அறிமுகமானவர். இவரை பாராளுமன்ற வேட்பாளராக அறிவித்ததை திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும், சமூக சேவை உள்ளம் கொண்டவர் என்ற வகையில் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இவர் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திமுகவில் உறுப்பினர், மடத்துக்குளம் ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய பொருளாளர், ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர், ஒன்றிய குழு துணை தலைவர் என படிப்படியாக கட்சியில் உயர்ந்துள்ளார் இவரது மனைவி லதா பிரியா மாவட்ட குழு உறுப்பினராக இருந்து வருகிறார் இவரது மகள் ஹரி வர்ஷா மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment