கலைஞர் பேருந்து நிலையத்தில் கடைகள் முதல் கழிவறை வரை மேயர் அதிரடி ஆய்வு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு !
திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் மேயர் தினேஷ்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார் . கலைஞர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது பழுதடைந்த ஆர் வோ சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்களை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், மூடி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து செயல்படுத்தவும், பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். திடீரென பொதுமக்கள் பயன் படுத்தும் கழிப்பறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டதில் கழிப்பறை சுகாதாரமாக இல்லாததால் அதிகாரிகளிடம் கழிப்பறைகளை சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கட்டண கழிப்பிடங்களில் எவ்வளவு கட்டணங்கள் வசூலிக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டறிந்தார். கழிப்பிடங்களை சுத்தம் செய்ய பினாயில்களை அதிகமாக வாங்கி வைத்து உபயோகப்படுத்துமாறு எச்சரிக்கை செய்தார். மேலும் கட்டண கழிப்பிடங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்க கூடாது என்று எச்சரித்தார்.
நடைபாதை ஆகிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் ஆக்கிரமிப்புகளை மூன்று நாட்களுக்குள் அகற்றாவிடால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .பொது மக்களுக்கு எந்த ஒரு வகையிலும் இடையூறு ஏற்படுத்த கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெரிய அளவில் உள்ள கரும்பு சாறு மிஷின்கள் கடைக்குள் வைத்து இயக்காமல் பயணிகள் நடமாடும் இடத்தில் வைத்துள்ளார்கள் இதனால் ஈக்கள் மற்றும் எறும்புகள் தொல்லையால் மிகவும் பாதிப்படைகின்றனர். மேயரின் அதிரடி நடவடிக்கையில் இந்த கரும்பு மெஷின்களை கடைக்குள் வைத்து இயக்க உத்தரவிட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment