கொளுத்தும் கோடை வெயிலில் ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடர் முற்றுகை போராட்டம்.
திருப்பூர் முதன்மை கல்வி அலுவலகம் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி எண் 311 நிறைவேற்ற கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கானோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட எஸ் எஸ் டி ஏ இயக்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது கடந்த 1- 6- 2009 ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடை நிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1-6- 2009-க்கு முன் நிர்ணயிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ-8,370 என்றும் அதன் பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ-5200 அடிப்படை ஊதியம் என்றும் ஒரே பணி ஒரே கல்வி தகுதி என இருந்த போதும் இரண்டு விதமாக ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது இதை மாற்ற கோரி கடந்த 12 ஆண்டு காலமாக எஸ் எஸ் டி ஏ இயக்கம் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது 2018 ஏப்ரல் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்னால் முதல்வர் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களது தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 311 ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்றும் இந்த கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்தார் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை எனவும் கடந்த 2022 டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள் மயங்கி விழுந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
2023 செப்டம்பரில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தற்போது பிப்ரவரி 19 முதல் சென்னை டி பி ஐ யில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவும் சராசரியாக 1000க்கும் மேற்பட்டவர்கள் காலையில் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டங்கள் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் இவ்வாறு கூறினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment