மாற்று திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் நடத்தும் மாற்று திறனாளிக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நடை பெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.
வாழ்ந்து காட்டுவோம் நாங்கள் அனைவரும் மாற்று திறனாளிகள் அல்ல மாற்றத்திற்கான திறனாளிகள் என்று தன் நம்பிக்கையுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை அனைவரும் மகிழ்வுடன் பெற்றுச் சென்றனர் . இந்த சிறப்பு மிக்க முகாமில் கலந்து கொண்ட அனைத்து வேலை வாய்ப்பு முகாம் விண்ணப்பங்களை சமூக சேவகி லீலாஜெகன் அவர்களின் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக பூர்த்தி செய்து செய்து தரப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment