திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக (ஞாயிறு) அன்று நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக பொது கூட்டம் .
வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதிக்கு மா.கி. சீதாலட்சுமி அவர்களை வேட்பாளராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ள நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாண்டியன் நகர் பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை 10-03-24 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது இந்த கூட்டத்தில் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் சேக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் சுடலை, வீரத்தமிழர் முன்னணி சிவசங்கர் மற்றும் பலர் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள் இந்த கூட்டத்திற்கு அனைத்து தாய்த் தமிழ் உறவுகளும் தவறாமல் கலந்து கொள்வும். என்று திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக அறிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அகாஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment