தாராபுரத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 27 March 2024

தாராபுரத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.


 தாராபுரத்தில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.


தாராபுரம் மார்ச் -26 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில்  வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல்   இந்தியா கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம்  சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை அமைச்சர்கள் மு. பெ .சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ் மாவட்ட செயலாளர் பத்மநாபன் நகர செயலாளர் முருகானந்தம்  செயற்குழு உறுப்பினர் தனசேகர் ஒன்றிய செயலாளர் எஸ் வி எஸ் செந்தில்குமார் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் இந்திய கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர். பின்பு கூட்டணி கட்சியினர் திமுக வெற்றி பெற எங்களுடைய தேர்தல் பணி அல்லும் பகலும் அயராது உழைப்போம் என்று வேட்பாளர் பிரகாஷ் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சியில் என் பங்கு தாராபுரம் தொகுதியில் என்றும் உங்களுடன் இருப்பேன் என்று பல வளர்ச்சி திட்டங்களை பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்க என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து கூட்டணிக் கட்சியினருக்கு நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார் நகர செயலாளர் முருகானந்தம் பங்கேற்றக் கூட்டணி கட்சிகள் கூட்டணி கட்சிகள் இந்திய காங்கிரஸ் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கம்யூனிஸ்ட்  விடுதலைச் சிறுத்தை திராவிட இயக்க தமிழர் பேரவை ஆதித்தமிழர் பேரவை மறுமலர்ச்சி முக்குலத்தோர் புலிப்படை திராவிட முன்னேற்ற கழகம் திராவிட கழகம் கொங்கு நாடு மக்கள்  மனிதநேய மக்கள்  தமிழக வாழ்வுரிமை  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்கள் நீதி மையம்   தமிழ் புலிகள் கட்சி மனிதநேய ஜனநாயக  மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில்  மாவட்ட   நிர்வாகிகள், தலைமை கழக  தொகுதி பொறுப்பாளர் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிக்கப்பட்டது தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கட்சி நிர்வாகிகள் தன் வருகை பதிவிட்டு சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad