அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் வழக்கறிஞர் மற்றும் மகளிர் அணி நிர்வாகி பிறந்தநாள் விழா!
திருப்பூர் பிரிட்ஜ் காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனர் ஜி.கே.விவசாயமணி(எ) ஜி சுப்பிரமணி அவர்களின் தலைமையில் சங்க தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் வழக்கறிஞர்.சு. திலக வர்மா, மகளிர் அணி நிர்வாகியும் சங்கத்தின் தலைவரின் துணைவியார் சிந்தாமணி சுப்பிரமணி ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு சங்க தலைமை அலுவலகத்தில் மகளிர் அணியினர் மற்றும் மாநில ,மாவட்ட ,மாநகர, நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி , நிர்வாகிகள் உறுப்பினர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு கேக் வெட்டி இருவருக்கும் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் பிறந்த நாளை கொண்டாடினர். பிறகு அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து அளிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment